CSI - குரு அருட்பொழிவு ஆராதனை முறை
தென் இந்திய
திருச்சபை
திருநெல்வேலி
திருமண்டலம்
குரு அருட்பொழிவு
ஆராதனை முறை
The Most. Rev.
Moderator, CSI
The Rt, Rev.
Moderator's Commissary
நாள்: நேரம்:
இடம்:
குரு அபிஷேகம்
பெறுவோர்
Rev.
(செயலர் - குருத்துவ நிலைவரக்குழு)
ஆரம்ப பாடல் பா.249
1.
நல் மீட்பர்
பட்சம் நில்லும்
ரட்சணிய
வீரரே,
ராஜாவின்
கொடியேற்றிப்
போராட்டம்
செய்யுமே
சேனாதிபதி
இயேசு
மாற்றாரை
மேற்கொள்வார்;
பின்
வெற்றி கிரீடம்
சூடி
செங்கோலும்
ஓச்சுவார்.
2.
நல் மீட்பர்
பட்சம் நில்லும்
எக்காளம்
ஊதுங்கால்
போர்க்கோலத்தோடு
சென்று
மெய்
விசுவாசத்தால்
அஞ்சாமல்
ஆண்மையோடே
போராடி
வாருமேன்;
பிசாசின்
திரள்சேனை
நீர்
வீழ்த்தி வெல்லுமேன்.
3.
நல் மீட்பர்
பட்சம் நில்லும்
எவ்வீர
சூரமும்
நம்பாமல்,
திவ்விய சக்தி
பெற்றே
பிரயோகியும்;
சர்வாயுதத்தை
ஈயும்
கர்த்தாவை
சாருவீர்;
எம்மோசமும்
பாராமல்
முன்
தண்டில் செல்லுவீர்.
4.
நல் மீட்பர்
பட்சம் நில்லும்
போராட்டம்
ஓயுமே
வெம்போரின்
கோஷ்டம்
வெற்றி
பாட்டாக மாறுமே;
மேற்கொள்ளும்
வீரர் ஜீவ
பொற்
கிரீடம் சூடுவார்
விண்
லோக நாதரோடே
வீற்றரசாளுவார்.


தென்
இந்திய திருச்சபை
குரு
அருட்பொழிவு
ஆராதனை முறை
ஆயத்தம்
Rev.
பிரார்த்தனை
செய்வோமாக
எல்லா
இருதயங்களையும்,
எல்லா விருப்பங்களையும்,
எல்லா இரகசியங்களையும்
அறிந்திருக்கிற
சர்வ வல்லமையுள்ள
தேவனே, நாங்கள்
தேவரீரிடத்தில்
பரிபூரணமாய் அன்புகூரவும்,
உமது பரிசுத்த
நாமத்தை உத்தமமாய்
மகிமைப்படுத்தவும்,
உமது பரிசுத்த
ஆவியின் ஏவுதலால்
எங்கள் இருதயத்தின்
சிந்தனைகளைச்
சுத்தம்பண்ணியருள
எங்கள் கர்த்தராகிய
கிறிஸ்துவின்
மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.
ஆமென்.
நாட்டை
இராகம் ஏகதாளம்
பரிசுத்த
தேவனே நித்தியமானவா
பரிபூரணனே
வல்லமை நிறைந்தவா
பரிவுடன்
இரங்குவீர் பரனே
சரணம் (3 தடவை)
நியாயப்பிரமாணத்தையும்,
தீர்க்கதரிசனங்களையும்
நமது ஆண்டவர் தொகுத்து
அருளியது:
நம்முடைய
கர்த்தராகிய இயேசு
கிறிஸ்து சொன்னதாவது:
இஸ்ரவேலே,
கேள்: நம்முடைய
தேவனாகிய கர்த்தர்
ஒருவரே கர்த்தர்;
உன் தேவனாகிய கர்த்தரிடத்தில்
உன் முழு இருதயத்தோடும்,
உன் முழு ஆத்துமாவோடும்,
உன் முழு மனதோடும்,
உன் முழு பலத்தோடும்
அன்புகூருவாயாக
என்பதே பிரதான
கற்பனை. இதற்கு
ஒப்பாயிருக்கிற
இரண்டாம் கற்பனை
என்னவென்றால்:
உன்னிடத்தில்
நீ அன்பு கூருவதுபோல்
பிறனிடத்திலும்
அன்புகூருவாயாக
என்பதே; இவைகளிலும்
பெரிய கற்பனை வேறொன்றுமில்லை. இவ்விரண்டு
கற்பனைகளிலும்
நியாயப்பிரமாணம்
முழுமையும் தீர்க்கதரிசனங்களும்
அடங்கியிருக்கிறது
என்பதே.
நாதநாமக்கிரியை ஆதிதாளம்
கர்த்தாவே
எங்களுக்கு இரங்கி
கருத்துடன்
இந்தப் பிரமாணத்தைக்
கைக்கொள்ள
இதயத்தை ஏவியருளும்
பின்
குரு சொல்வது:
பிரியமானவர்களே,
நாம் இப்பொழுது
கடவுளுடைய மகா
பரிசுத்த வசனத்தைக்
கேட்கவும், ஆண்டவருடைய
சரீரத்தையும்,
இரத்தத்தையும்
பெற்றுக்கொள்ளவும்
இங்கே கூடி வந்திருக்கிறோம்.
உத்தம மனஸ்தாபத்தோடும்,
விசுவாசத்தோடும்
அவரிடத்தில் கிட்டிச்
சேருவதற்காக, கடவுளுடைய
கிருபையைத் தேடி
முழங்காற்படியிட்டு,
மௌனமாக நம்மை நாமே
சோதித்து அறிவோமாக.
எல்லோரும்
முழங்காற்படியிட்டு
சற்றுநேரம் அமைதியாயிருக்கவும்.
குரு சொல்வது:
உங்கள்
பாவங்களினிமித்தம்
முழு இருதயத்தோடே
உண்மையாய் மனஸ்தாபப்பட்டு
பிறரிடத்தில்
அன்பும் சிநேகமுமாயிருந்து
இனி தேவனுடைய கற்பனைகளைக்
கைக்கொண்டு புதிதாக்கப்பட்டவர்களாய்
அவருடைய பரிசுத்த
மார்க்கத்தில்
நடப்போம் என்று
தீர்மானித்திருக்கிற
நீங்கள், நமது
ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவின்
மூலமாக சர்வ வல்லமையுள்ள
கடவுளோடு ஒப்புரவாகும்படி,
மறுபடியும் உங்கள்
பாவங்களை மனத்தாழ்மையாய்
அறிக்கையிடுங்கள்.
தன் பாவங்களை
மறைக்கிறவன் வாழ்வடைய
மாட்டான்: அவைகளை
அறிக்கை செய்து
விட்டு விடுகிறவனோ
இரக்கம் பெறுவான்
(நீதி.28:13). இரக்கத்தைப்
பெற்றுக் கொள்ள
இதுவே தருணம்.
எல்லோரும்
சேர்ந்து சொல்வது:
மனதுருக்கத்தின்
ஆண்டவரே, உமக்கு
விரோதமாகவும்,
எங்கள் சகோதர,
சகோதரிகளுக்கு
விரோதமாகவும்
பாவம் செய்துள்ளோம்
என்று அறிக்கையிடுகிறோம்.
கிறிஸ்துவின்
நாமத்தைச் சொல்லியும்
தீமையைவிட்டு
விலகவில்லை. இயேசு
கிறிஸ்து காட்டிய
நீதி வழியில் உம்மை
நாங்கள் உண்மையாகப்
பின்பற்றவில்லை.
உம்முடைய விடுதலை
அருட் பணியில்
இவ்வுலகில் உம்மோடு
நாங்கள் சேர்ந்து
செயலாற்றவில்லை
என்றும் அறிக்கையிடுகிறோம்.
கிருபை நிறைந்த
ஆண்டவரே உம்முடைய
மிகுந்த இரக்கத்தினால்
பாவமற எங்களைச்
சுத்திகரியும்.
உம்முடைய பரிசுத்த
ஆவியினால் விடுதலை
பெறவும், புது
ஜீவன் உள்ளவர்களாய்
வாழவும், உம்மோடும்
சக மனிதரோடும்
சமாதானத்தோடு
வாழவும் அருள்
புரிந்தருளும்.
ஆமென்.
குரு
எழுந்து நின்று
சொல்வது:
இயேசு
கிறிஸ்துவின்
வழியாய் தம்மிடத்தில்
உண்மையாய் மனந்திரும்புகிற
யாவருக்கும் அருளப்படுகிற
கிருபை நிறைந்த
தேவ வசனத்தைக்
கேளுங்கள்.
வருத்தப்பட்டுப்
பாரஞ்சுமக்கிறவர்களே,
நீங்கள் எல்லாரும்
என்னிடத்தில்
வாருங்கள்; நான்
உங்களுக்கு இளைப்பாறுதல்
தருவேன்.
தேவன்,
தம்முடைய ஒரேபேறான
குமாரனை விசுவாசிக்கிறவன்
எவனோ, அவன் கெட்டுப்போகாமல்
நித்திய ஜீவனை
அடையும்படிக்கு,
அவரைத் தந்தருளி
இவ்வளவாய் உலகத்தில்
அன்புகூர்ந்தார்.
பாவிகளை
இரட்சிக்க கிறிஸ்து
இயேசு உலகத்தில்
வந்தார் என்கிற
வார்த்தை உண்மையும்
எல்லா அங்கீகரிப்புக்கும்
பாத்திரமுமானது.
ஒருவன்
பாவஞ்செய்வானானால்,
நீதிபரராயிருக்கிற
இயேசு கிறிஸ்து,
நமக்காகப் பிதாவினிடத்தில்
பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
நம்முடையப் பாவங்களை
நிவிர்த்தி செய்கிற
கிருபாதார பலி
அவரே.
சற்று நேரம் அமைதியாய்
இருந்தபின் பேராயர்
சொல்வது:
நம்முடைய
பரம பிதாவாகிய
சர்வ வல்லமையுள்ள
கடவுள், உத்தம
மனஸ்தாபத்தோடும்,
உண்மையான விசுவாசத்தோடும்
தம்மிடத்திற்கு
மனந்திரும்பி,
தங்கள் சகோதர,
சகோதரிகளின் குற்றங்களை
மன்னிக்கிற யாவருக்கும்
பாவ மன்னிப்பை
அருளிச்செய்வோம்
என்று மிகுந்த
இரக்கமாய் வாக்குதத்தம்
செய்திருக்கிறார்.
அவர் நம்முடைய
கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவினிமித்தம்
உங்களுக்கு இரங்கி,
உங்கள் பாவங்கள்
எல்லாவற்றையும்
மன்னித்து, அவைகளினின்று
உங்களை விடுதலையாக்கி,
சகல நன்மையிலும்
உங்களை உறுதிப்படுத்தி,
நிலைநிறுத்தி,
உங்களை நித்திய
ஜீவரையில் சேர்ப்பாராக.
ஆமென்,
தேவரீருக்கே ஸ்தோத்திரமுண்டாவதாக
Rev.
கர்த்தர்
உங்களோடிருப்பாராக
மறுமொழி: கர்த்தருமதாவியோடும்
இருப்பாராக
ஜெபம் பண்ணக்கடவோம்
சுருக்க ஜெபம்
சர்வ வல்ல
கடவுளே, சகல நல்
ஈவுகளையும் அருளுகிறவரே,
உமது திருச்சபையில்
பல்வேறான பணிவிடைகளை,
உமது ஒரே ஆவியானவரால்
ஏற்படுத்தியிருக்கிறீரே;
குருக்களாகும்படி
இப்பொழுது அழைக்கப்பட்டிருக்கும்
உமது ஊழியக்காரராகிய
இவர்களை இரக்கமாய்க்
கண்ணோக்கிப் பாரும்.
உமது சுவிசேஷ சத்தியத்தால்
இவர்களைப் பூரணப்
படுத்தி, குற்றமற்ற
நடக்கையால் இவர்களை
அலங்கரித்தருளும்.
உமது பரிசுத்த
ஆவியின் வல்லமையால்
இவர்களை நிரப்பியருளும்.
உமது திருநாமத்திற்கு
மகிமையுண்டாகவும்,
உமது திருச்சபை
ஊன்றக் கட்டப்படவும்
இவர்கள் தங்கள்
வார்த்தையினாலும்,
நல்ல முன்மாதிரியினாலும்
உண்மையோடும், மகிழ்ச்சியோடும்
உமக்கு ஊழியம்
செய்ய அனுக்கிரகித்தருளும்
உம்மோடும், பரிசுத்த
ஆவியானவரோடும்,
சதாகாலமும் ஜீவித்து
அரசாளுகிற எங்கள்
இரட்சகர் இயேசு
கிறிஸ்துவின்
புண்ணியங்களினிமித்தம்
உம்மை வேண்டிக்
கொள்ளுகிறோம். ஆமென்.
சபையார்
அமரலாம்
Mr.
பழைய ஏற்பாட்டு
வேத பகுதி: எசேக்கியேல்
33:1-9
தோத்திரம்
உண்டாவதாக தேவரீருக்கே
தோத்திரம்
உண்டாவதாக
Rev.
நிருப
பகுதி : 1 பேதுரு
5:1-11
தோத்திரம்
உண்டாவதாக தேவரீருக்கே
தோத்திரம்
உண்டாவதாக
Rev.
பரிசுத்த
நற்செய்திப் பகுதி
: யோவான் 10:1-16
மகிமையே
உண்டாவதாக கிறிஸ்துவுக்கே
மகிமையே
உண்டாவதாக
கீதம்
20 கீர்த்தனை
14
1.
சருவ வலிமை கிருபைகள்
மிகுந்த சருவேசா!
தரிசனம்
தருமுன் சந்நிதி
புகுந்தேன் திருவாசா
2.
தூய சிந்தை உண்மையில்
உனையே தொழுதேத்த
தூய
ஆவி கொண்டெனை நிரப்பும்
ஜகதீசா!
3.
இருதயத்தைச்
சிதற விடாமல் ஒரு
நேராய்,
இசைத்தமைத்துப்
பரவசமாக்கும்
நசரேயா!
4.
அருளின் வாக்கை
கருத்துடன் கேட்டு
அகத்தேற்று
அறுபது
நூறு முப்பதாய்ப்
பெருக அருளீசா!
அருளுரை:
Rt.Rev.
Rev.
நிசேயா விசுவாசப்
பிரமாணத்தை அறிக்கை
செய்வோம்
வானத்தையும்,
பூமியையும், காணப்படுகிறதும்
காணப்படாததுமான,
எல்லாவற்றையும்
படைத்தவராயிருக்கிற,
சர்வ வல்லமையுள்ள
பிதாவாகிய, ஒரே
தேவனை விசுவாசிக்கிறேன்.
ஒரே
கர்த்தருமாய்,
தேவனுடைய ஒரே பேறான
குமாரனுமாயிருக்கிற,
இயேசு கிறிஸ்துவையும்
விசுவாசிக்கிறேன்.
அவர் சகல உலகங்களும்
உண்டாவதற்கு முன்னே,
தமது பிதாவினாலே
ஜெநிப்பிக்கப்பட்டவர்;
தெய்வத்தில் தெய்வமானவர்,
ஜோதியில் ஜோதியானவர்,
மெய்த்தேவனில்
மெய்த்தேவனானவர்,
உண்டாக்கப்படாமல்
ஜெநிப்பிக்கப்பட்டவர்.
பிதாவோடே ஒரே தன்மையுடையவர்,
சகலத்தையும் உண்டாக்கினவர்;
மனிதராகிய நமக்காகவும்
நமக்கு இரட்சிப்பு
உண்டாகவும், பரமண்டலத்திலிருந்து
இறங்கி, பரித்த
ஆவியினாலே, கன்னிமரியாளிடத்தில்
அவதரித்து, மனுஷனானார்;
நமக்காகப் பொந்தியு
பிலாத்துவின்
காலத்தில், சிலுவையில்
அறையுண்டு, பாடுபட்டு
அடக்கம் பண்ணப்பட்டார்;
வேத வாக்கியங்களின்படி,
மூன்றாம் நாள்,
உயிர்த்தெழுந்தார்;
பரமண்டலத்துக்கேறி
பிதாவின் வலது
பாரிசத்தில் வீற்றிருக்கிறார்;
உயிருள்ளோரையும்
மரித்தோரையும்
நியாயந்தீர்க்க,
மகிமையோடே திரும்ப
வருவார்; அவருடைய
ராஜ்யத்துக்கு
முடிவில்லை.
கர்த்தருமாய்,
ஜீவனைக் கொடுக்கிறவருமாய்,
பிதாவிலும் குமாரனிலும்
நின்று புறப்படுகிறவருமாய்,
பிதாவோடும் குமாரனோடும்
கூடத்தொழுது தோத்தரிக்கப்படுகிறவருமாய்,
தீர்க்கதரிசிகள்
மூலமாக உரைத்தவருமாயிருக்கிற
பரிசுத்த ஆவியையும்
விசுவாசிக்கிறேன்.
ஒரே பரிசுத்த பொதுவான
அப்போஸ்தலத் திருச்சபை
உண்டென்று விசுவாசிக்கிறேன்.
பாவ மன்னிப்புக்கென்று
நியமிக்கப்பட்ட
ஒரே நானத்தை அறிக்கையிடுகிறேன்.
மரித்தோர் உயிர்த்தெழுதலும்,
மறுமைக்குரிய
ஜீவனும் உண்டாகும்
என்று காத்திருக்கிறேன். ஆமென்.
பாடல்: கீ.கீ.303, பா.139 - தெய்வாவீ
மனவாசராய்
1.
தெய்வாவீ,
மனவாசராய்
வந்தனல்
மூட்டுவீர்;
உம்
அடியாரின் உள்ளத்தில்
மா கிரியை செய்குவீர்.
2.
நீர் சோதிபோல்
பிரகாசித்து,
நிர்ப்பந்தஸ்திதியும்;
என்
கேடும் காட்டி,
ஜீவனாம்
மெய்ப்பாதை
காண்பியும்.
3.
நீர் வான அக்னி
போலவே
துர்
ஆசை சிந்தையும்
தீக்
குணமும் சுட்டெரிப்பீர்
பொல்லாத செய்கையும்.
4.
நற்பனிபோலும்
இறங்கும்
இவ்வேற்ற
நேரத்தில்;
செழிப்புண்டாகச்
செய்திடும்
பாழான நிலத்தில்.
5.
புறாவைப்போலசாந்தமாய்
நீர்
செட்டை விரிப்பீர்;
மெய்ச்
சமாதானம் ஆறுதல்
நற் சீரும்
அருள்வீர்.
6.
நீர் பெரும்
காற்றைப் போலவும்
வந்தசைத்தருளும்;
கல்
நெஞ்சை மாற்றிப்
பேரன்பை
நன்குணரச்
செய்யும்.
சபையார்
அமரலாம்
அருட்பொழிவு
பெறுவோர் முன்
நிறுத்தப்படுவர்
பேராயர்
தமது ஆசனத்தில்
உட்கார்ந்திருக்க,
திருப்பணித்துறை
நிலைவரக்குழு
செயலர் குரு அபிஷேகம்
பெறுவோரை பேராயர்
முன் நிறுத்திச்
சொல்வது.
Rev.
கர்த்தருக்குள்
சங்கை பொருந்திய
தகப்பனே, குருக்களாக
அபிஷேகம் பெறுவதற்கு... ஆகிய இவர்களை
உமது முன் நிறுத்துகிறோம்.
பேராயர்: இவர்கள்
அபிஷேகம் பெறுவதற்குரிய
தீர்மான ஆணை வாசிக்கப்படுவதாக.
Mr.
அவர்களை அபிஷேகம்
செய்வதற்கு, அத்தியட்சாதீனம்
பிறப்பித்திருக்கும்
அதிகாரப் பத்திரம்
வாசிக்கப்படும்.
பேராயர் ஜனங்களைப்
பார்த்துச் சொல்வது.
பிரியமானவர்களே,
கடவுளுக்குச்
சித்தமானால் குருக்களாக
அபிஷேகம் பெற நாம்
விரும்புவோர்
இவர்களே. இவர்கள்
தகுந்த படிப்பும்,
தேவபக்தியுள்ள
வாழ்க்கையுமுடையவர்களென்றும்
இப்பணிவிடையில்
கடவுளுக்கு ஊழியம்
செய்ய கிரமமாய்
அழைக்கப்பட்டவர்களென்றும்
இவர்களை விசாரிக்கும்படியாகவும்,
பரீட்சிக்கும்படியாகவும்
நியமிக்கப்பட்டவர்கள்
இவர்களைக் குறித்துச்
சொல்ல நீங்கள்
இப்பொழுது கேட்டீர்கள்.
இவ்வபிஷேகம் பெறுவதற்கு
இவர்களில் யாதொரு
தடையுண்டென்று
உங்களில் யாராகிலும்
அறிந்திருந்தால்
கர்த்தருடைய நாமத்தினாலே
இங்கு முன் வந்து
அதைத் தெரிவிக்க
வேண்டும்.
சபையார் நிற்க
பேராயர் சொல்வது
நாம்
நம்மிலே தகுதியுள்ளவர்களல்லர்;
நம்முடைய தகுதி
கடவுளால் உண்டாகிறது.
அபிஷேகம்
பெறுவதற்கு இவர்கள்
கடவுளின் கிருபையால்
தகுதியுள்ளவர்கள்
என்று நம்புகிறீர்களா?
சபை: இவர்கள்
தகுதியுள்ளவர்களென்று
நம்புகிறோம்.
கடவுளுக்கே
மகிமையுண்டாவதாக.
Presenting the Ordinands:
Duly appointed pastoral standing committee secretary will present the candidates and says to the Bishop, seated in his chair.
Rev.
Reverend Bishop in God, we present to you...... these persons to be, ordained Presbyters.
Bishop : Let the authority for their ordination be read.
The authorisation of the Diocese for the ordination of the candidates is read. This shall include a statement of the work to which each candidate has been called.
Mr.
The Bishop says to
the people:
Beloved, these are they whom we intend, God willing, to ordain Presbyters. You have heard that those appointed to inquire about them and examine them believe them to be persons of sound learning and godly life, and believe them to be duly called to serve God in this ministry. We, therefore ask you to declare your assent.
The People stand, and the Bishop says:
We are not sufficient of ourselves; our sufficiency is from God.
Do you trust that these persons are, by God's grace, worthy to be ordained?
People: We trust that they are worthy. To God be the glory.
ஜெபம் பண்ணக்கடவோம்
பரிசுத்தாவியானவர்
மூலமாக திருச்சபையில்
ஊழியங்களையும்,
ஊழியர்களையும்
அருளிச்செய்கிற
ஆண்டவரே, உம்மால்
அழைக்கப்பட்டாலன்றி
ஒருவனும் தானாக
இந்த கனமான ஊழியத்திற்கு
ஏற்படுவதில்லை.
இப்போதும் உமது
சந்நிதானத்தில்
திருச்சபையாக
நாங்கள் நிறுத்துகிற
இவர்களை கண்ணோக்கிப்
பாரும், உமது திருக்கரம்
இவர்கள் மீது அமர்ந்து
இவர்களை வரங்களினாலும்,
வல்லமைகளாலும்
நிரப்புவதாக, தம்மையே
வெறுமையாக்கி
அடிமையின் ரூபமெடுத்து
ஊழியத்திற்கான
முன்மாதிரியை
விட்டுச்சென்ற
எங்கள் ஆண்டவராகிய
இயேசுகிறிஸ்துவின்
மூலமாய் வேண்டிக்
கொள்கிறோம். ஆமென்.
பேராயர் ஆசனத்தில்
அமர, சபையார் உட்காருவார்கள்
குரு அபிஷேகம்
பெறுவோரை பரீட்சித்தல்
குரு
அபிஷேகம் பெறுவோர்
நின்று கொண்டிருக்க
வேண்டும்.
திருச்சபைக்குத்
தலைவரும் இராஜாவுமாயிருக்கிற
ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவின்
நாமத்திலே ஜெபத்தோடு
கைகளை வைத்து,
உங்களைக் குருக்களாக
அபிஷேகம் செய்யும்படி
இங்கு கூடியிருக்கிறோம்.
தமது சரீரமாகிய
திருச்சபை ஊன்றக்
கட்டப்படுவதற்காக
அவரே உன்னதத்திற்கு
ஏறி மனிதருக்கு
வரங்களை அருளிச்
செய்திருக்கிறார்.
அழைப்பு
பெற்றுள்ள உங்களை
ஊழியத்திற்கும்
உத்தியோகத்திற்கும்,
கடவுள் தாமே இவ்வபிஷேகத்தில்,
கிருபையும் அதிகாரத்தையும்
அருளுகிறார் என்று
நம்புகிறோம். தமது
திருச்சபை செய்யும்
ஜெபத்திற்கு உத்தரவாகவும்,
அவரால் நியமிக்கப்பட்ட
பணிவிடைக்காரருடைய
சொற்கள், செயல்கள்
மூலமாகவும் அவ்வாறு
செய்கிறார் என்று
நம்புகிறோம். சற்று
முன்பு நாம் ஒன்று
சேர்ந்து விசுவாசப்
பிரமாணத்தை சொல்லுகையில்,
நாம் அறிக்கையிட்ட
விசுவாசத்தின்படி,
ஒரே பரிசுத்த பொதுவான
அப்போஸ்தல திருச்சபையின்
ஒரு பாகமாகவே நாம்
செயல்படுகிறோம்,
நாம் பேசுகிறோம்.
Let us pray
Almighty God, giver of all good
things, who by your one Spirit have appointed a diversity of ministries in your
Church: mercifully behold these your servants now called to the office of
Presbyter; and so replenish them with the truth of your Gospel, adorn them with
innocence of life, and fill them with the power of your Holy Spirit, that both
by word and good example, they may faithfully and joyfully serve you, to the
glory of your name and the building up of your Church; through the merits of
our Saviour Jesus Christ, who lives and reigns with you and the Holy Spirit,
world without end. Amen.
The Bishop
is seated in his chair, the people are seated
The Bishop examines the Ordinand:
The people
are seated. The candidates stand. The Bishop is seated in his chair and says:
In the name of the Lord Jesus
Christ, the Lord and Head of the Church, who, being ascended on high, has given
gifts to people for the building up of his Body, we are assembled here to
ordain you Presbyters by prayer and the laying on of hands.
In
this act of ordination, we believe that it is God, who gives you grace and
authority for the office and work to which you are called, and that he does so
in answer to the prayers of his Church and through the actions and words of his
appointed ministers. We act and speak as part of the one, holy, catholic and
apostolic Church, and in the faith, which we have now with united voice
declared in the words of the creed.
ஆகையால்,
நீங்கள் உண்மையாகவே
இந்த விசுவாசத்தை
உடையவர்களாயிருந்து,
இந்தப் பணிவிடையை
நிறைவேற்ற கடவுளின்
கிருபையைப் பெற்றுக்
கொள்ளவே விரும்புகிறீர்கள்
என்பதை நாங்கள்
அறிந்து கொள்ளும்படியாக,
இந்த கேள்விகளுக்கு
நீங்கள் உத்தரவு
சொல்ல உங்களைக்
கேட்டுக்கொள்கிறோம்.
கடவுளின்
திருச்சபையில்
இப்பணிவிடை செய்வதற்கு
அவரால் உண்மையாய்
நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்களென்று
நிம்புகிறீர்களா?
மறுமொழி: அப்படியே
நம்புகிறேன்.
கடவுளை
மகிமைப்படுத்த
வேண்டுமென்ற ஆர்வம்;
நமது ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவின்
பேரிலுள்ள அன்பு;
மனிதர் காப்பாற்றப்பட
வேண்டுமென்ற ஆசை
ஆகிய இவைகள்தானா,
உங்கள் சொந்த இருதயத்தை
நீங்கள் அறிந்தமட்டில்,
இப்பணிவிடையில்
நீங்கள் பிரவேசிப்பதற்கு
உங்களை ஏவிவிட்ட
முக்கிய நோக்கங்கள்?
மறுமொழி:
என் இருதயத்தை
நான் அறிந்தமட்டில்
இவைகள் தான் என்
முக்கிய நோக்கங்கள்.
இரட்சிப்புக்கு
அவசியமானவை யாவும்
பரிசுத்த வேதாகமத்தில்
அடங்கியுள்ளனவென்றும்,
அவ்வேதமே விசுவாசத்திற்கு
மேலானதும் முடிவானதுமான
அளவுகோல் என்றும்
ஒப்புக்கொள்ளுகிறீர்களா?
மறுமொழி:
அவ்வாறே ஒப்புக்கொள்ளுகிறேன்.
வேதத்தில்
காட்டப்பட்டிருக்கும்
விசுவாசத்திற்கு
சாட்சி கொடுத்து
அதைப் பாதுகாப்பவை,
அப்போஸ்தலர், நிசேயா
விசுவாசப் பிரமாணங்களென்று
ஒப்புக்கொள்ளுகிறீர்களா?
மறுமொழி:
அப்படியே ஒப்புக்கொள்ளுகிறேன்.
பரிசுத்த
வேதாகமத்தை வாசிப்பதிலும்,
அதற்கனுகூலமான
மற்ற நூல்களைப்
படிப்பதிலும்
கருத்துள்ளவர்களாயிருப்பீர்களா?
மறுமொழி:
ஆண்டவருடைய ஒத்தாசையினால்
அப்படியே செய்வேன்.
Therefore, you should declare that
you be faithful in fulfilling all the duties with the grace of our Lord Almighty,
you are asked to answer the following question.
Do you
believe that you are called to exercise this ministry within the Church of
South India?
Answer:
I believe I am so called.
The
zeal for the glory of God, love for our Lord Jesus Christ, and a desire for the
salvation of people so far as you know your own heart, your chief motives for
entering into this ministry?
Answer: So far as I know my own heart, they are.
Do you accept the Holy
Scriptures as containing all things necessary for salvation, and as the supreme
and decisive standard of faith?
Answer:
I do so accept them.
Do you accept the
Apostles' and Nicene Creeds as witnessing to and safeguarding the faith that is
set forth in the Scriptures?
Answer:
I do so accept them.
கிறிஸ்துவின்
ஸ்தானாதிபதிகளாக
நீங்கள் அழைக்கப்
பட்டிருக்கிறீர்களென்பதை
உணர்ந்து கொண்டு,
கடவுளின் கிருபையுள்ள
சுவிசேஷத்தைக்
குறித்து எல்லா
மனிதருக்கும்
சாட்சியாயிருக்கும்படி,
உங்களிலிருக்கும்
தேவ வரத்தை பரிசுத்த
ஆவியின் ஒத்தாசையால்
இடைவிடாமல் அனல்
மூட்டி எழுப்பிவிடுவீர்களா?
மறுமொழி:
ஆண்டவருடைய ஒத்தாசையினால்
அப்படியே செய்வேன்.
உங்களுக்கு
ஒப்புவிக்கப்பட்டிருக்கும்
ஜனங்களுக்கு கடவுளின்
வார்த்தையை உத்தமமாய்ப்
போதித்துப் பிரசங்கம்
செய்வீர்களா? நமது
ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்து கட்டளையிட்டபடி
அவர்களுக்குச்
சாக்கிரமெந்துகளை
வழங்குவீர்களா?
மறுமொழி:
ஆண்டவருடைய ஒத்தாசையினால்
அப்படியே செய்வேன்.
நீங்கள்
உண்மையுள்ள காவற்காரராகவும்,
மந்தையின் மேய்ப்பராகவும்
இருப்பீர்களா?
அவர்களுக்குள்
அன்பும் சமாதானமும்
நிலைத்திருக்க
முயற்சிப்பீர்களா?
பாவிகளை மனந்திரும்பச்
செய்து, அவர்களுக்கு
கடவுளின் பாவ மன்னிப்பை
அறிவிப்பீர்களா?
மறுமொழி:
ஆண்டவருடைய ஒத்தாசையினால்
அப்படியே செய்வேன்.
கிறிஸ்துவினிமித்தம்
நோயாளிகளைச் சந்தித்து,
தரித்திரரையும்,
நிர்ப்பந்தரையும்
பரிபாலித்து, ஒடுக்கப்
பட்டவர்களுக்கு
உதவி செய்ய உண்மையுடையவர்களாயிருப்பீர்களா?
மறுமொழி:
ஆண்டவருடைய ஒத்தாசையினால்
அப்படியே செய்வேன்.
Will
you be diligent in the reading of the Holy Scriptures and in such studies as
help to knowledge of the same?
Answer
: I will, the Lord being my helper.
Will
you be the ambassadors of Christ and realize that you are called to Preach the
Word of unceasingly by the Holy Spirit from the picture bear witness to all men
about the Gospel in Grace of God?
Answer: I will, the Lord being my helper.
Will
you faithfully teach and preach the Word of God to the people committed to your
charge, and minister the Sacraments as commanded by our Lord Jesus Christ?
Answer: I will, the Lord being my helper.
Will
you be faithful watchmen/women shepherds of the flock? Will you endeavour to maintain
peace and love among them, to bring sinners to repentance, and to declare to
them God's forgiveness?
Answer:
I will, the Lord being my helper.
Will you, for Christ's
sake, be faithful in visiting the sick, in caring for the poor and needy, and
helping the oppressed?
Answer:
I will, the Lord being my helper.
சபையிலுள்ள
ஒவ்வொரு அங்கத்தினரும்
ஊழியம் செய்வதற்குத்
தகுதியுள்ளவர்களாயிருக்கவும்,
திருச்சபையாகிய
சரீரம் முழுவதும்
அன்பில் ஊன்றக்கட்டப்பட
தாங்கள் பெற்றிருக்கும்
கடவுளின் பற்பல
ஈவுகளையும், உத்தமமாக
உபயோகப்படுத்தும்
உக்கிராணக்காரராய்
ஜனங்களுக்கு உதவி
செய்வீர்களா?
மறுமொழி:
ஆண்டவருடைய ஒத்தாசையினால்
அப்படியே செய்வேன்.
நீங்களும்,
உங்கள் வீட்டாரும்,
கிறிஸ்துவின்
மந்தைக்கு நல்ல
முன் மாதிரிகளாயிருக்கும்படி
ஜெபத்தோடும், அடக்க
ஒடுக்கத்தோடும்
நீங்கள் வாழ்ந்து,
உங்கள் குடும்பத்தாரையும்
அவ்விதமாய் நடத்த
முயலுவீர்களா?
மறுமொழி:
ஆண்டவருடைய ஒத்தாசையினால்
அப்படியே செய்வேன்.
தென்
இந்திய திருச்சபையில்
இத்திருப்பணிவிடையைச்
செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம்
என்று நம்புகிற
நீங்கள், அதன்
சிட்சை முறையை
ஏற்றுக்கொண்டு
திருச்சபையால்
உங்கள் மேல் நியமிக்கப்படுவோருக்கு
சுவிசேஷத்தால்
பெற்றெடுக்கப்பட்ட
மகனாக/மகளாக அடங்கி
நடப்பீர்களா?
மறுமொழி:
கடவுளின் ஒத்தாசையினால்
அப்படியே செய்வேன்.
ஜெபம்பண்ணக்கடவோம்
இவைகளெல்லாவற்றையும்
செய்ய வேண்டுமென்ற
மனதை உங்களுக்குத்
தந்திருக்கிற
நம்முடைய பரம பிதாவாகிய
சர்வ வல்ல கடவுள்,
இவைகளெல்லாவற்றையும்
செய்து முடிக்கத்தக்கதாகத்
தமது அருளையும்
கிருபையையும்
உங்களுக்குத்
தந்தருளுவாராக.
உங்களை அழைக்கிறவர்
உண்மையுள்ளவர்;
அவர் அப்படியே
செய்வார்.
ஆமென்.
Will
you help your people to be good stewards of the manifold gifts of God, that every
member may be equipped for the work of ministering, and the whole Body built up
in love?
Answer: I will, the Lord being my helper.
Will
you endeavour to lead a prayerful and disciplined life and so to guide your
family that both you and your family may be worthy examples to the flock of
Christ?
Answer: I will, the Lord being my helper.
You
believe that you are called to exercise this ministry within the Church of South
India; will you accept its discipline and submit yourselves as children in the
Gospel to those whom this Church shall appoint to have the rule over you?
Answer: I will, the Lord being my helper.
Let us Pray
The almighty God, our heavenly Father,
who has given you the will to do all these things, grant you also the grace to perform
them. Faithful is he who has called you, who also will do it. AMEN
அருட்பொழிவு
அமைதியாக
ஜெபம் செய்தபின்
முழங்காலில் நின்று
பாடவேண்டும்
கீதம் 318 பாமாலை
277
1.
மா
தூய ஆவி! இறங்கும்,
விண் தீபம்
நெஞ்சில் ஏற்றிடும்;
ஞானாபிஷேக
தைலம் நீர்
நல்வரம்
ஏழும் ஈகிறீர்
2.
மெய் ஜீவன்,
ஆறுதல் அன்பும்
உம் அபிஷேகம்
தந்திடும்;
ஓயாத ஒளி வீசியே
உள்ளத்தின்
மருள் நீக்குமே
3.
துக்கிக்கும்
நெஞ்சைத் தேற்றவே
ஏராள அருள்
பெய்யுமே;
மாற்றார்
வராமல் காத்திடும்
சீர்வாழ்வு
சுகம் ஈந்திடும்
4.
பிதா, குமாரன்,
ஆவியும்
திரியேகர்
என்று போதியும்;
யுகயுகங்களாகவே
"உம் தாசர்
பாடும் பாட்டிதே
பிதா, சுதன்
சுத்தாவி! உமக்கே
சதா நித்தியமும்
ஸ்துத்தியமே!
- ஆமென்
Ordination
After the
Prayer in silence; sing the song in kneeling
1.
come, Holy
Ghost, our souls inspire
and lighten with celestial fire;
thou the anointing Spirit art,
who dost
thy seven-fold gifts impart.
2.
Thy blessed unction from above
is comfort, life, and fire of love;
enable with perpetual light
the
dullness of our mortal sight.
3.
Anoint and cheer our soiled face
With the abundance of thy grace;
Keep far our foes, give peace at home;
Where thou
art guide no ill can come.
4.
Teach us to know the Father, Son,
and thee, of both, to be but one,
that through the ages all along
this may be
our endless song:
Praise to thine eternal merit,
Father, Son, and Holy
Spirit.
Amen.
குரு அருட்பொழிவு
ஜெபம் பண்ணக்கடவோம்
பேராயர்
குருக்களுடன்
எழுந்து நின்று
சொல்வது
மிகுந்த
இரக்கமுள்ள பிதாவே,
எங்கள் பேரிலுள்ள
உமது அளவில்லா
அன்பினாலும், தயவினாலும்,
உமக்கு சொந்த ஜனமாகவும்,
ராஜரீக ஆசாரியக்
கூட்டமாகவும்,
பரிசுத்த ஜாதியாகவும்
இருக்கும்படி
எங்களைத் தெரிந்தெடுத்தீரே;
உமது குமாரனாகிய
இயேசு கிறிஸ்துவை
பெரிய பிரதான ஆசாரியராகவும்,
நித்திய இரட்சிப்புக்குக்
காரணராகவும் எங்களுக்குத்
தந்தருளினீரே;
கடவுளே, அதற்காக
உம்மை மகிமைப்படுத்துகிறோம்.
அவருடைய மரணத்தினாலே
மரணத்தை வென்று,
பரலோகத்திற்கு
ஏறிச் சென்று தாம்
மகிமையோடு திரும்ப
வருமளவும், தமது
சரீரமாகிய திருச்சபை
ஊன்றக் கட்டப்படுவதற்கு
தமது ஜனத்தின்
மேல் தமது ஈவுகளை
ஏராளமாகப் பொழிந்தருளி,
சிலரை அப்போஸ்தலராகவும்,
சிலரைத் தீர்க்கத்தரிசிகளாகவும்,
சிலரை சுவிசேஷகராகவும்,
சிலரை மேய்ப்பராகவும்,
போதகராகவும் தந்தருளினார்.
அதற்காகவும் உமக்கு
நன்றி செலுத்துகிறோம்.
ஆமென்.
பேராயர்
தமது கரத்தை அபிஷேகம்
பெறுவோர் ஒவ்வொருவர்
தலை மீதும் வைக்க,
குருக்களும் தங்களது
வலது கரங்களை அவ்வாறே
வைத்திருக்க ஒவ்வொருவருக்கும்
பேராயர் சொல்ல
வேண்டிய வார்த்தைகள்
Presbyter's Ordination
Let us Pray
The Bishop, standing together with
the presbyters, says:
We praise and glorify you, most
merciful Father, because to fulfil your plan for the salvation of the human
race you have raised up in every land, a holy people, a royal priesthood, a
universal Church. Because in your great love for humankind you sent your only Son
Jesus Christ to bear among us in the form of a servant; for our sake he humbled
himself, and in obedience accepted death, even death on a cross; and therefore
you have highly exalted him and given him the name which is above every name.
In your great love you have given Jesus Christ, your only Son, to be the
Apostle and High Priest of our faith, and the Shepherd and Guardian of our
life, and the author of eternal salvation.
The Bishop lays his hand upon the
head of each person to be ordained in turn, the presbyters also laying on their
right hands; and the Bishop repeats the following words:
உமது
ஊழியக்காரர் ஆகிய
...................................................... உமது
பரிசுத்த ஆவியை
அனுப்பியருள வேண்டுமென்று
மகா தாழ்மையோடும்
உம்மை வேண்டிக்கொள்ளுகிறோம்.
உமது வார்த்தையையும்,
சாக்கிரமெந்துகளையும்
வழங்கவும், மனஸ்தாபப்படும்
பாவிகளுக்கு உமது
பாவ விமோசனத்தைக்
கூறி அறிவிக்கவும்,
உமது நாமத்திலே
உமது நாமத்திலே
உமது திவ்ய சத்தத்துக்குக்
கீழ்ப்படிந்து,
உமது திருச்சபையில்
இவருக்கு அதிகாரத்தைக்
கொடுத்து, குரு
பணிவிடைக்கு இவரை
இப்பொழுது அபிஷேகம்
செய்கிறோம். ஆமென்.
ஒலிவ
எண்ணெய் பூசி ஜெபித்தல்
சர்வ வல்லமையுள்ள
நித்திய கடவுளே,
உம்முடைய ஒரே பேறான
குமாரனாகிய இயேசு
கிறிஸ்துவை தூய
ஆவியானவரால் அபிஷேகித்தவரே,
இந்த உமது ஊழியக்காரர்மேல்
உமது பரிசுத்த
ஆவியின் அருள்மாரியைப்
பொழிந்து, ஆவியின்
வரங்களால் நிறைத்து,
உமது திருச்சபையில்
மக்களை உமக்கு
நேராக திருப்பவும்,
நல்வழிப்படுத்தவும்;
உமக்கு முன் எப்பொழுதும்
உத்தம பணிவிடைக்காரராக
விளங்கவும்; தூய
ஆவியானவரால் இவரை
முத்தரித்தருள
வேண்டுமென்று,
எங்கள் ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவின்
மூலமாய் வேண்டிக்கொள்கிறோம்.
ஆமென்.
அவர்கள் இன்னும்
முழங்காலில் நின்று
கொண்டிருக்க ஒவ்வொருவருக்கும்
பேராயர் ஒரு வேதாகமத்தைக்
கொடுத்துச் சொல்வது.
கடவுளின்
வசனத்தைப் பிரசங்கிக்கவும்,
பணிவிடை செய்யும்படி
நீர் நியமிக்கப்படும்
சபைகளில் சாக்கிரமெந்துகளை
வழங்கவும், நீர்
பெற்றிருக்கும்
அதிகாரத்தின்
அடையாளமாக இந்த
வேதாகமத்தைப்
பெற்றுக்கொள்வீராக.
We
ordain your servants ............ and entreat you to bestow your holy spirit on
your servants that they may administer your words and sacraments and to
pronounce forgiveness to sinners and to be good shepherds of your flock and
that they be obedient to your voice. We now authenticate them to minister your
congregation. AMEN.
Apply Olive Oil and Pray,
Though omnipotent and eternal Lord,
who consecrated Jesus Christ with your Holy Spirit, we call upon you to shower
Your Holy Spirit on Your servants that they may be filled with your manifold
gifts to equip your people for the work of ministry. We thank you for sending
him, not to be served but to serve, and to give up his life as a ransom for
many; and by him we are taught that whoever among us wishes to be great must
make himself the servant of all and to build up his body, the Church.
The candidates continue to kneel. The Bishop delivers each one a Bible,
saying:
Take this, a token of the authority
that you have received to preach the Word of God and to minister the sacraments
in the congregations to which you shall be appointed.
அந்நியோந்நியத்தின்
வலது கை கொடுத்து
பேராயர் பின்னும்
சொல்வது:
அந்நியோந்நியத்தின்
வலது கையை உமக்குக்
கொடுத்து, இப்பணிவிடையில்
எங்களோடு பங்கு
பெறும்படி உம்மை
எங்களுடன் ஏற்றுக்
கொள்ளுகிறோம்.
Rev.
தோளணிப்பட்டை
(stole) நேர்ப்படுத்தல்
அபிஷேகம்
பெற்ற எல்லாருக்காகவும்
பேராயர் தொடர்ந்து
ஜெபிப்பார்.
ஜெபம் செய்வோம்
ஆண்டவரே,
உமது ஜனத்தோடு
உமக்கு உகந்த ஆவிக்குரிய
பலிகளைச் செலுத்தும்படி,
இவர்களுக்கு உமது
கிருபையைத் தந்தருள
வேண்டுமென்று
உம்மை வேண்டிக்கொள்ளுகிறோம்.
உமது இரட்சிப்பின்
சுவிசேஷத்தைக்
கூறி அறிவிக்கும்படி
சகல அறிவினாலும்
வாக்கு வல்லமையினாலும்
இவர்களை நிரப்பியருளும்.
ஆடுகளுக்காகத்
தமது ஜீவனைக் கொடுத்த
நல்ல மேய்ப்பரைப்
பின்பற்றுபவர்களாகத்
தங்கள் மந்தையை
விழிப்போடும்,
அன்போடும் பாதுகாப்பவர்களாக்கியருளும்.
உமது பார்வையில்
கண்டிக்கப்படாதவர்களாக
எல்லாக் காரியங்களிலும்
தங்கள் பணிவிடையை
நிறைவேற்ற உதவி
புரிந்தருளும்.
முடிவு பரியந்தம்
நிலைத்திருந்து
உமது உத்தம ஊழியக்காரர்
அனைவரோடும்கூட,
உமது நித்திய சந்தோஷத்திற்குள்
பிரவேசிக்க அருள்
புரிந்தருளும்.
உம்மோடும், பரிசுத்த
ஆவியானவரோடும்
ஒரே கடவுளாகத்
தொழுது தோத்தரிக்கப்பட்டு,
சதாகாலமும் ஜீவித்து
அரசாளுகிற எங்கள்
ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவின்
வழியாய் தாழ்மையோடு
வேண்டிக்கொள்ளுகிறோம்.
ஆமென்.
யாவரும்
எழுந்து நிற்க
பேராயர் சொல்வது
Dn. Dn.
Dn.
Dn. Dn.
Dn.
Dn. ஆகிய
இவர்கள் கடவுளுடைய
திருச்சபையின்
குருக்களாக இருக்கிறார்களென்று,
பிதா குமாரன் பரிசுத்த
ஆவியின் நாமத்திலே
அறிவிக்கிறோம்.
The Bishop gives to each one the
right hand of fellowship and says:
We give you the right hand of fellowships, and receive you to take part with us in thisministry.
Rev.
Straightening
cross-over stole
And the Bishop continues, praying
for all those ordained:
Let us Pray
Almighty and gracious God, give to these your servants fullness of your grace and power to fulfil the priestly ministry within the royal priesthood of your people. Make them to be true pastors, watching over those who are committed to their care, gathering the scattered, bringing back the wandering and seeking for the lost. Strengthen them to proclaim with boldness the Gospel of your salvation. Give them the grace to offer with all your people spiritual sacrifices acceptable to you, and to minister the Sacraments of the New Covenant. May they grow in wisdom and discretion, that they may rightly counsel those in doubt and declare to those that are penitent the forgiveness of their sins. Give them wisdom and discipline to work faithfully with all their fellow servants in Christ, that the we glory and your love. And at the last, with all your true and faithful servants, bring them to eternal joy; through Jesus Christ your Son our Lord, who with you, Father, and with the Holy Sprit, lives and reigns, and is worthy of all honour, glory and blessing, now and always. AMEN
The
people stand, and the Bishop says:
We declare that Dn. Dn. Dn.
Dn. Dn. Dn. Dn.
are Presbyters in the Church of God, in the name of the Father, and of the Son, and of the Holy Spirit.
Amen, Thanks be to God
ஆமென் தேவரீருக்கே
ஸ்தோத்திரமுண்டாவதாக.
கர்த்தர்
தந்த ஈவுக்காக
என்றென்றைக்கும்
ஸ்தோத்திரம்
விண்ணோர்
மண்ணோர் கூட்டமாக
பாடுவார்
சங்கீர்த்தனம்
மீட்கப்பட்ட
யாவராலும்
ஏக
தேவரீருக்கே
ஆரவாரமாய்
என்றைக்கும்
ஸ்தோத்திரம்
உண்டாகவே ஆமென்.
அறிவிப்பு:
Introducing
Candidates &
Issuing
Ordination Certificate and Gifts
காணிக்கை பாடல்:
பாடகர்
குழு
பாடல் 1: கீ.கீ.393,
கி.கீ.513
ஆண்டவா,
உன்றன் சேவைக்கடியேன்
அர்ப்பணஞ்செய்யத்
தூண்டும்
உன் ஆவி அருள்வாய்
அனுபல்லவி
என்னைத்
தியாகிக்க ஏவும்
உன்
அனல் மூட்டிடுவாய்
இந்நிலம்
தன்னில்மாளும்
மனுமக்கள்
மீட்பிற்காக - ஆண்டவா
சரணங்கள்
1. புசிக்கக்பண்டமில்லாமல்
பூவில்
இல்லமுமே அன்றி,
நசித்து
நலிந்து நாட்டில்
கசிந்து
கண்ணீர் சொரிந்து
தேசமெல்லாம்
தியங்கும்
நேசமக்கள்
சேவைக்கே
நிமலா
எனை ஏற்றுக்கொள். - ஆண்டவா
2. வறுமை வன்
கடன் வியாதி
குருட்டாட்டம்
கட்டி கடும்
அறிவீனம்
அந்தகாரம்
மருள்மூடி
மக்கள் வாடும்,
தருணம்
இக்காலமதால்
குருநாதா
உனதன்பை
அருள்வாய்,
அடியேனுக்கே. -
ஆண்டவா
3. அருமை ரட்சகா,
உன்றன்
அரும்பாடு
கண்ணீர்த் தியாகம்,
பேரன்பு
பாரச் சிலுவை
சருவமும்
கண்ட என்றன்
இருதயம்
நைந்துருகி
வெறும்
பேச்சாய் நின்றிடாமல்
தருணம்
எனையே தந்தேன்.
-
ஆண்டவா
4. உலகே உனதாயினும்
தலைசாய்க்கத்தாவில்லாமல்
நலமே
புரிந்து திரிந்தாய்
எல்லாம்
துறந்து யான் உன்
நல்லாவி
கொண்டுழைக்க
வல்லா,
உனின் சிலுவை
அல்லால்
வழி வேறுண்டோ?
- ஆண்டவா
பாடல் 2: கீ.கீ.116,
கி.கீ.309
ஆவியை மழைபோலே
யூற்றும் - பல
சாதிகளையேசு
மந்தையிற் கூட்டும்.
அனுபல்லவி
பாவிக்காய்
ஜீவனை விட்ட கிறிஸ்தே
பரிந்து
நீர் பேசியே இறங்கிடச்
செய்யும். - ஆவியை
சரணங்கள்
1. அன்பினால்
ஜீவனை விட்டீர்
- ஆவி
அருள்மாரி
பொழியவே பரலோகஞ்
சென்றீர்
இன்பப்
பெருக்கிலே பொங்கி
மகிழ
ஏராளமான
ஜனங்களைச் சேரும்.
- ஆவியை
2. சிதறுண்டலைகிற
ஆட்டைப்-பின்னும்
தேடிப்
பிடித்து நீர்
தூக்கிச் சுமந்து
பதறாதே
நான் தான் உன்
நல் மேய்ப்பன்
யேசு
பாக்கியரென்னும்
நல் வாக்கையருளும்.
- ஆவியை
3. காத்திருந்த
பல பேரும் - மனங்
கடினங்
கொள்ளா முன்னே
உம் பாதஞ் சேரும்
தோத்திரக்
கீதங்கள் பாடிப்
புகழ்ந்து
சுத்தலோகம்
வரத் தூயாவி ஊற்றும்.
-
ஆவியை
4. தோத்திரக்
கீதங்கள் பாடி
- எங்கும்
சுவிசேஷ
ஜெயத்தையே நிதம்
நிதம் தேடிப்
பாத்திரராக
அநேகரெழும்பப்
பரிசுத்த
ஆவியின் அருள்
மாரி ஊற்றும். - ஆவியை
சபையார்
காணிக்கை செலுத்தின
பின்
அருட்பொழிவு
பெற்றோர் அர்ப்பணிப்பு
பாடல்:
தந்தேன்
என்னை இயேசுவே
இந்த
நேரமே உமக்கே
அனுபல்லவி
உந்தனுக்கே
ஊழியஞ்செய்யத்
தந்தேன்
என்னைத் தாங்கியருளம்
- தந்தேன்
1. ஜீவகாலம்
முழுதும்
தேவ
பணி செய்திடுவேன்
பூவில்
கடும் போர் புரிகையில்
காவும்
உந்தன் கரத்தினில்
வைத்து -
தந்தேன்
2. உந்தஞ்
சித்தமே செய்வேன்
என்றன்
சித்தம் ஒழித்திடுவேன்
எந்த
இடம் எனக்குக்
காட்டினும்
இயேசுவே,
அங்கே இதோ! போகிறேன் - தந்தேன்
3. ஒன்றுமில்லை
நான் ஐயா!
உம்மாலன்றி
ஒன்றும் செய்யேன்
அன்று
சீஷர்க்களித்த
ஆவியால்
இன்றே
அடியேனை நிரப்பும் - தந்தேன்
காணிக்கை
ஜெபம்
Rev.
பரிசுத்த
பிதாவே, உமது கிருபாசனத்தண்டையில்
பிரவேசிப்பதற்குப்
புதிதும், ஜீவனுமான
மார்க்கத்தை உமது
அருமையான குமாரனின்
இரத்ததினால் எங்களுக்கு
உண்டு பண்ணினீரே.
நாங்கள் அபாத்திரராயினும்
அவர் மூலமாக உம்மண்டை
வருகிறோம். எங்களையும்
இந்தக் காணிக்கைகளையும்
உம்முடைய நாம மகிமைக்காக
அங்கீகரித்து
உபயோகிக்கும்படியாக,
தாழ்மையோடு வேண்டிக்
கொள்ளுகிறோம்.
வானத்திலும், பூமியிலும்
உள்ளவைகளெல்லாம்
உம்முடையவைகள்.
உமது கரத்திலே
வாங்கி உமக்குக்
கொடுக்கிறோம்.
ஆமென்.
Rev.
ஜெபம் பண்ணக்கடவோம்
இரண்டாவது
லித்தானியா
பரத்திலிருந்து
வரும் சமாதானத்திற்காகவும்,
நம்முடைய ஆத்துமாக்களின்
இரட்சிப்புக்காகவும்
கர்த்தரை நோக்கி
ஜெபிப்போமாக.
கர்த்தாவே
கிருபையாயிரும்
அகிலலோக
சமாதானத்திற்காகவும்,
கடவுளுடைய பரிசுத்த
சபைகளின் நல்வாழ்வுக்காகவும்,
அவைகளின் ஒருமைப்
பாட்டுக்காகவும்
கர்த்தரை நோக்கி
ஜெபிப்போமாக.
கர்த்தாவே கிருபையாயிரும்
நம்முடைய
பேராயர்களும்,
மற்றெல்லா பணிவிடைக்காரர்களும்,
விசேஷமாய் பேரருட்பெருந்திரு.
என்னும்
நமது பிரதம பேராயரும்,
அருட்பெருந்திரு.
என்னும்
நமது பேராயரும்
நல்ல இருதயத்தோடும்,
சுத்த மனச்சாட்சியோடும்
தங்கள் பணிவிடையை
நிறைவேற்ற கர்த்தரை
நோக்கி ஜெபிப்போமாக.
கர்த்தாவே கிருபையாயிரும்
குருக்களாக
இப்பொழுது அபிஷேகம்
பெற்றிருக்கும்
இவர்கள், கடவுளின்
நாமத்திற்கு மகிமையுண்டாகும்படி
உத்தமமாய் ஊழியம்
செய்ய கர்த்தரை
நோக்கி ஜெபிப்போமாக.
கர்த்தாவே
கிருபையாயிரும்
தெய்வ
பணிவிடைக்காரரான
மனைவிகளும், குடும்பத்
தாரும், விசேஷமாய்
இப்பொழுது அபிஷேகம்
பெற்றிருக்கிற
இவர்களுடைய வீட்டாரும்
கிறிஸ்துவின்
அன்பை எடுத்துக்
காட்டும்படி கர்த்தரை
நோக்கி ஜெபிப்போமாக.
கர்த்தாவே கிருபையாயிரும்
நமது
தேசத்தின் அதிபதிகளுக்காகவும்,
அதிகாரம் வகிப்பவர்
எல்லாருக்காகவும்
கர்த்தரை நோக்கி
ஜெபிப்போமாக.
கர்த்தாவே கிருபையாயிரும்
வியாதியஸ்தர்,
உபத்திரவப்படுவோர்,
துக்கப்படுவோர்,
மரணத்-தருவாயிலிருப்போர்
அனைவருக்காகவும்
கர்த்தரை நோக்கி
ஜெபிப்போமாக.
கர்த்தாவே
கிருபையாயிரும்
ஏழைகள்,
பட்டினியாயிருப்போர்,
அனாதைகள், விதவைகள்,
உபத்திரவப்படுவோர்
அனைவருக்காகவும்
கர்த்தரை நோக்கி
ஜெபிப்போமாக.
கர்த்தாவே
கிருபையாயிரும்
அந்தகாரத்தினின்று
நம்மைத் தம்முடைய
ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு
வரவழைத்தவருடைய
மகத்துவங்களைக்
காண்பிக்கும்
பொருட்டாக, நமக்காகவும்,
கிறிஸ்துவின்
நாமத்தை அறிக்கைபண்ணும்
யாவருக்காகவும்
கர்த்தரை நோக்கி
ஜெபிப்போமாக.
கர்த்தாவே
கிருபையாயிரும்
Rev.
ஜெபம் பண்ணக்கடவோம்
சர்வ வல்லமையுள்ள
தேவனே, சகல ஞானத்திற்கும்
காரணரே, நாங்கள்
வேண்டிக் கொள்வதற்கு
முன் எங்கள் அவசியங்கள்
உமக்குத் தெரியும்.
நாங்கள் அறியாமல்
கேட்கிறோம் என்பதும்
உமக்குத் தெரியும்.
தேவரீர் எங்கள்
பலவீனங்களைப்
பார்த்து இரங்கி,
நாங்கள் எங்கள்
அபாத்திரத்தின்
நிமித்தம் துணிந்து
கேட்கக் கூடாதவைகளையும்,
எங்கள் குருட்டாட்டத்தினிமித்தம்
கேட்கத் தெரியாதவைகளையும்,
உம்முடைய குமாரனும்,
எங்கள் இரட்சகருமாகிய
இயேசு கிறிஸ்துவின்
புண்ணியத்தினிமித்தம்
எங்களுக்கு அனுக்கிரகித்தருளும்.
ஆமென்.
பேராயர்:
அப்பம் பிட்குதல்
எல்லாரும்
எழுந்து நிற்க,
பேராயர் சொல்வது
இதோ, சகோதரர்
ஒருமித்து வாசம்பண்ணுகிறது
எவ்வளவு நன்மையும்,
எவ்வளவு இன்பமுமானது.
அந்த ஒரே
அப்பத்தில் நாமெல்லாரும்
பங்கு பெறுகிறபடியால்,
அநேகரான நாம்,
ஒரே அப்பமும்,
ஒரே சரீரமுமாயிருக்கிறோம்
சுத்தசாவேரி
இராகம் ஆதிதாளம்
ஆண்டவரின்
கூடாரத்தில் ஆனந்த
பலியிட்டு
ஆவலாய்க்
கீர்த்தனம் பாடிடுவோம்
சமாதானம் இங்கே
கொடுக்கலாம்
ஜெபம் பண்ணக்கடவோம்
மோகன இராகம் ரூபகதாளம்
பிரதான
குருநாதா பிரசன்னம்
அருள்வீரே
பிரிய சீடர்
நடுவிலே பிரசன்னமானவரே
பிதாவோடும்
ஆவியோடும் பிணைந்தொரே
தேவனாய்
பிசகாதே
அரசாளும் பெருந்தகையே
அப்பமதைப்
பிட்கையிலே
வெளிப்படுத்தும்.
ஆமென்
சாரங்கா
இராகம் ஏகதாளம்
பேராயர்:
கர்த்தர் உங்களோடிருப்பாராக
மறு : கர்த்தருமதாவியோடும்
இருப்பாராக
பேராயர்:
உங்கள் இதயத்தை
உயர்த்திடுங்கள்
மறு : உயர்த்துவோம்
இதயத்தைக் கர்த்தரிடமே
பேராயர்:
தோத்திரம் செலுத்துவோம்
தேவனுக்கே
மறு : தகுதியும்
நீதியும் அதுவேயாகும்
கர்த்தாவே,
பரிசுத்த பிதாவே,
சர்வ வல்லமையுள்ள
நித்திய தேவனே,
நாங்கள் எக்காலத்திலும்
எவ்விடத்திலும்
உமக்கு தோத்திரம்
செலுத்துகிறது
தகுதியும், நீதியும்
எங்களுக்கு விசேஷித்த
கடமையுமாயிருக்கிறது.
பிதா என்னை
அனுப்பினது போல,
நானும் உங்களை
அனுப்புகிறேன்
என்று சீஷர்களுக்கு
அதிகாரம் கொடுத்த
எங்கள் ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவின்
மூலமாய் உம்மைத்
துதிக்க கடமையுள்ளவர்களாயிருக்கிறோம்.
காம்போதி
இராகம் ஆதிதாளம்
தோத்திரிக்கின்றோம்
தூயா நின் நாமம்
தூதர்
குழாத்தோடும்
துதித்துப் புகழ்ந்து
துதி
மிகுந்தேறிட மேன்மைப்படுத்தி
தூய சேனைகளின்
கர்த்தராம் தேவரீர்
தூயவர்
தூயவர் தூயவரெனவே
துதிமிகுந்தேறிட
மேன்மைப்படுத்தி
தோத்தரிக்கின்றோம்
நின்
மகிமையினால் நிறைந்தன
விண்மண்
நித்திய
மகிமை நிமலனே உமக்கே
துத்தியம்
செய்து மகிமைப்படுத்தி
தூய சேனைகளின்
கர்த்தராம் தேவரீர்
தூயவர்
தூயவர் தூயவரெனவே
துத்தியம்
செய்து மகிமைப்படுத்தி
தோத்தரிக்கின்றோம்
சங்கராபரண
இராகம் திஸ்ர
ஏகதாளம்
கர்த்தரின்
நாமத்தில் வந்தவராம்
கருணையாய்
இங்கு வருபவராம்
உத்தமர்
தோத்திரம் ஏற்பவராம்
உன்னதத்திலென்றும்
ஓசன்னா
ஆம்
பிதாவே! நீர் பரிசுத்தர்,
நீர் தோத்தரிக்கப்பட்டவர்.
தேவரீர் மனிதரில்
உருக்கமாய் அன்புகூர்ந்து,
உமது ஒரே பேரான
குமாரனாகிய இயேசு
கிறிஸ்து எங்கள்
தன்மையைத் தரித்துக்
கொள்ளவும், சிலுவையில்
மரித்து எங்களை
மீட்டுக் கொள்ளவும்,
அவரைத் தந்தருளினீரே;
அவர் சிலுவையில்
ஒரே தரம் தம்மைத்
தாமே ஏக பலியாக
ஒப்புக்கொடுத்து
சர்வலோகத்தின்
பாவங்களையும்
நிவிர்த்தி செய்வதற்கு
நிறைவும் பூரணமும்
போந்ததுமான பலியையும்,
காணிக்கையையும்,
பரிகாரத்தையும்
செலுத்தினதுமல்லாமல்,
தமது அருமையான
மரணத்தை என்றைக்கும்
நினைப்பூட்டும்
ஞாபகத்தை நியமித்து,
தாம் திரும்ப வருமளவும்,
நாங்கள் அதை அநுசரித்து
வரும்படி, தமது
பரிசுத்த சுவிசேஷத்தில்
கட்டளையிட்டருளினாரே;
அவர் தாம் காட்டிக்
கொடுக்கப்பட்ட
அன்று இராத்திரியிலே
அப்பத்தை எடுத்து
ஸ்தோத்திரம் பண்ணி,
அதைப்பிட்டு, சீஷர்களுக்குக்
கொடுத்து: நீங்கள்
வாங்கிப் புசியுங்கள்;
இது உங்களுக்காகக்
கொடுக்கப்படுகிற
என்னுடைய சரீரம்.
என்னை நினைவு கூரும்படி
இதைச் செய்யுங்கள்
என்றார்.
அப்படியே
போஜனம்பண்ணின
பின்பு அவர் பாத்திரத்தையும்
எடுத்து, ஸ்தோத்திரம்
பண்ணி, அவர்களுக்குக்
கொடுத்து, நீங்கள்
எல்லாரும் இதிலே
பானம்பண்ணுங்கள்;
இது பாவ மன்னிப்புண்டாகும்படி
உங்களுக்காகவும்,
அநேகருக்காகவும்
சிந்தப்படுகிற
புது உடன்படிக்கைக்குரிய
என்னுடைய இரத்தம்;
இதைப் பானம் பண்ணும்பொழுதெல்லாம்,
என்னை நினைவுகூரும்படி
இதைச் செய்யுங்கள்
என்று திருவுளம்பற்றினார்.
ஆமென்.
ஹிந்தோள
ராகம் ஆதிதாளம்
கர்த்தா
உம் மரணத்தை நினைவு
கூர்ந்து
களிப்புடன்
உயிர்த்ததை அறிக்கை
செய்து
காத்திருப்போம்
உம் வருகைக்காக
காசினியில்
உம்மைத் தோத்தரிப்போம்
ஆதலால்
பிதாவே, உமது குமாரனாகிய
எங்கள் ஆண்டவரின்
அருமையான பாடுகளையும்,
மரணத்தையும், மகிமையான
உயிர்த்தெழுதலையும்,
பரமேறுதலையும்
நினைவுகூர்ந்து
உமது அடியார்களாகிய
நாங்கள் அவருடைய
கட்டளையின்படியே
அவர் திரும்ப வருமளவும்,
அவரை நினைவுகூர்ந்து
இதைச் செய்கிறோம்.
அவரில் நீர் எங்களுக்காக
நிறைவேற்றின பூரண
மீட்புக்காக உமக்கு
நன்றி செலுத்துகிறோம்.
நவரோஜ்
இராகம் ஆதி
தாளம்
கர்த்தாவே
எங்கள் தேவனே
கருத்துடன்
உம்மைத் துதிக்கின்றோம்
காருண்யரே
உம்மை புகழுகின்றோம்
கனிவுடன்
மகிமைப்படுத்துகின்றோம்
இரக்கமுள்ள
பிதாவே, நாங்கள்
பிட்கிற அப்பம்
கிறிஸ்துவினுடைய
சரீரத்தின் ஐக்கியமாயும்,
நாங்கள் ஆசீர்வதிக்கிற
பாத்திரம் கிறிஸ்துவினுடைய
இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கும்படி
எங்களையும் நீரே
தந்த இந்த அப்பத்தையும்,
திராட்சரசத்தையும்
உமது பரிசுத்த
ஆவியினால் பரிசுத்தப்படுத்த
வேண்டுமென்று
மிகுந்த தாழ்மையோடு
பிரார்த்திக்கிறோம்.
நாங்களெல்லாரும்
எங்கள் ஆண்டவராகிய
கிறிஸ்துவில்
கூட்டி இணைக்கப்பட்டவர்களாகி,
விசுவாசத்தில்
ஒருமைப்படவும்,
தலையாகிய அவருக்குள்
எல்லாவற்றிலேயும்
வளரவும் கிருபை
செய்யும். அவரோடும்
பரிசுத்த ஆவியோடும்
ஐக்கியமாயிருக்கிற
சர்வ வல்லமையுள்ள
பிதாவாகிய உமக்கு
அவர் மூலமாய்ச்
சகல கனமும் மகிமையும்
என்றென்றைக்கும்
உண்டாவதாக. ஆமென்.
நமது
இரட்சகராகிய கிறிஸ்து
கற்பித்தபடி அவரில்
நமக்கு அருளப்பட்ட
தைரியத்தோடே சொல்லுவோமாக.
பரமண்டலங்களிலிருக்கிற
எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம்
பரிசுத்தப்படுவதாக.
உம்முடைய ராஜ்யம்
வருவதாக. உம்முடைய
சித்தம் பரமண்டலத்திலே
செய்யப்படுகிறது
போல, பூமியிலேயும்
செய்யப்படுவதாக.
அன்றன்றுள்ள எங்கள்
அப்பத்தை எங்களுக்கு
இன்று தாரும் எங்களுக்கு
விரோதமாய் குற்றஞ்
செய்கிறவர்களுக்கு
நாங்கள் மன்னிக்கிறது
போல எங்கள் குற்றங்களை
எங்களுக்கு மன்னியும்.
எங்களைச் சோதனைக்குள்
பிரவேசிக்கப்
பண்ணாமல், தீமையினின்று
எங்களை இரட்சித்துக்கொள்ளும்.
ராஜ்யமும், வல்லமையும்,
மகிமையும் என்றென்றைக்கும்
உம்முடையவைகளே.
ஆமென்.
எல்லாரும்
முழங்காலில் நின்று
சற்று நேரம் அமைதியாய்
இருக்கவும்.
இரக்கமுள்ள
கர்த்தாவே, எங்கள்
சுயநீதியை நம்பி,
நாங்கள் உம்முடைய
பந்தியில் சேரத்துணியாமல்,
தேவரீருடைய அளவற்ற
இரக்கத்தையே நம்பிச்
சேருகிறோம். உம்முடைய
மேசையின் கீழ்
விழும் துணிக்கைகளையும்
பொறுக்கிக்கொள்ள
நாங்கள் பாத்திரர்
அல்ல. ஆனாலும்
தேவரீர் எப்பொழுதும்
இரக்கஞ்செய்கிற
லட்சணமுடைய மாறாத
ஆண்டவராயிருக்கிறீர்.
ஆகையால் கிருபையுள்ள
கர்த்தாவே, உமது
அருமையான குமாரனாகிய
இயேசு கிறிஸ்துவின்
விலைமதியாத சரீரத்தாலும்
இரத்தத்தாலும்,
எங்கள் பாவமுள்ள
சரீரமும், எப்பொழுதும்
நாங்கள் அவருக்குள்ளும்,
அவர் எங்களுக்குள்ளும்
வாசமாயிருப்பதற்கு
ஏற்றவிதமாய் அவருடைய
சரீரத்தைப் புசித்து,
அவருடைய இரத்தத்தைப்
பானம் பண்ண எங்களுக்குக்
கிருபை செய்தருளும்.
ஆமென்.
பேராயர்
எழுந்து நின்று,
அப்பத்தைப் பிட்டுச்சொல்வது
நாம்
பிட்கிற அப்பம்
கிறிஸ்துவினுடைய
சரீரத்தின் ஐக்கியமாய்
இருக்கிறதல்லவா!
மலஹரி
இராகம் ரூபகதாளம்
ஜெகத்தின்
பாவத்தைச் சுமந்து
தீர்க்கிற
தேவாட்டுக்குட்டியே
எங்களுக்கிரங்கும்
தேவாசமாதானம்
தாரும்
தேவாட்டுக்குட்டியே
எங்களுக்கிரங்கும்
தேவாசமாதானம்
தாரும்
Rev.
கிறிஸ்துவின்
சரீரமும் இரத்தமுமாகிய
சாக்கிரமெந்தை
விசுவாசத்தினால்
பெற்றுக் கொண்டவர்களாகிய
நாம் அவருக்குத்
தோத்திரம் செலுத்துவோமாக.
சர்வ
வல்லமையுள்ள கடவுளே,
பரம பிதாவே, உமது
நேசகுமாரனும்,
எங்கள் ஆண்டவருமாகிய
கிறிஸ்துவுக்குள்,
எங்களை உமது பிள்ளைகளாக
ஏற்றுக்கொண்டு,
அவருடைய விலைமதியாத
திருச்சரீரமும்
இரத்தமுமாகிய
ஞான ஆகாரத்தால்
எங்களைத் திருப்தியாக்கியிருக்கிறீர்.
எங்கள் பாவங்களை
மன்னித்து, என்றுமுள்ள
வாழ்வை எங்களுக்கு
வாக்குப் பண்ணியிருக்கிறீர்.
அளவிடப்படாத இந்த
நன்மைகளுக்காக
உம்மைத் தோத்தரிக்கின்றோம். சரீரமும்
ஆத்துமாவுமாகிய
எங்களைத் தூய உயிருள்ள
பலியாக உமக்குப்
படைக்கிறோம். இதுவே
நாங்கள் செய்யும்
உள்ளார்ந்த வழிபாடு.
நாங்கள் இந்த உலகத்தின்
போக்கின்படி ஒழுகாமல்
கடவுளின் திருவுளம்
எது எனத் தேர்ந்தெடுக்க
எங்கள் உள்ளம்
புதுப்பிக்கப்பெற்று
மாற்றமடைய அருள்புரிவீராக.
கடைசியில் நாங்கள்
உமது இறைமக்கள்
அனைவரோடும் உமது
என்றுமுள்ள அரசின்
மகிழ்ச்சியைப்
பெறத்தக்கதாக
இவ்வுலகில் உமக்குக்
கீழ்ப்படிந்து
நடக்க எங்களுக்கு
அருள்புரியும்.
உம்மோடும் தூய
ஆவியானவரோடும்
ஒரே கடவுளாய் என்றென்றும்
வீற்றிருந்து
ஆளுகை செய்யும்.
எங்கள் ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவின்
மூலமாய் வேண்டிக்
கொள்கிறோம். ஆமென்.
சுத்சாவேரி
இராகம் திரிபுடைதாளம்
ஆமென் எங்கள்
தேவனுக்குத் துதி
மகிமை ஞானமுடன்
தேமதுர
தோத்திரமும் கனம்
மகிமை புகழோடு
தாமிருக்கும்
காலமெல்லாம் நித்தியமும்
உண்டாக
ஆமென் என
துதியெடுப்போம்
அன்பர்
குழாமொடு சேர்ந்து
ஜெபம் பண்ணக்கடவோம்
அன்பின்
ஆண்டவரே, எங்களை
உமது சமாதானத்தின்
கருவிகளாக்கியருளும்.
பகைமையுள்ள இடத்தில்
அன்பையும், தீங்குள்ள
இடத்தில் மன்னிப்பையும்,
சந்தேகம் நிறைந்த
இடத்தில் விசுவாசத்தையும்,
சோர்வடைந்த நேரத்தில்
நம்பிக்கையையும்,
இருளுள்ள இடத்தில்
ஒளியையும், சஞ்சலமுள்ளோர்
மத்தியில் சந்தோஷத்தையும்
விதைக்க எங்களுக்கு
உதவி செய்யும்.
நாங்கள் ஆறுதலுக்காய்
ஏங்குவதைவிட ஆறுதல்
அளிப்பதையும்,
பிறர் எங்களை புரிந்துகொள்ள
நாடுவதைவிட பிறரை
புரிந்து கொள்வதையும்,
பிறரால் நேசிக்கப்படுவதைவிட
பிறரை நேசிப்பதையும்
நாட எங்களுக்கு
அருள் செய்யும்.
ஏனெனில் கொடுப்பதின்
மூலம் பெற்றுக்
கொள்கிறோம். மன்னிப்பதின்
மூலம் மன்னிக்கப்படுகிறோம்.
மரிப்பதில் நித்திய
ஜீவனை அடைகிறோம்.
ஆண்டவரே, எங்களை
உமது சமாதானத்தின்
கருவிகளாக்கியருள
இயேசு கிறிஸ்துவின்
மூலமாய் வேண்டிக்
கொள்கிறோம். ஆமென்.
பேராயர்:
நிறைவு ஆசீர்வாதம்
எல்லாப்
புத்திக்கும்
மேலான தேவ சமாதானம்
உங்களோடே இருந்து,
நீங்கள் தேவனையும்,
அவருடைய குமாரனாகிய
நம்முடைய நாதர்
இயேசு கிறிஸ்துவையும்
பற்றிய அறிவிலும்,
அன்பிலும் நிலைத்திருக்கும்படி
உங்கள் இருதயத்தையும்,
சிந்தையையும்
காக்கக்கடவது.
பிதா, குமாரன்,
பரிசுத்த ஆவியுமாகிய,
சர்வ வல்லமை பொருந்திய
தேவனுடைய ஆசீர்வாதம்
உங்களுக்குள்ளே
இருந்து, எப்பொழுதும்
உங்களோடே நிலைத்திருக்கக்கடவது.
ஆமென்.
நிறைவு கீதம்:
எல்லாருக்கும்
மா உன்னதர்,
கர்த்தாதி
கர்த்தரே,
மெய்யான
தெய்வமனிதர்,
நீர்
வாழ்க, இயேசுவே
விண்ணோர்களோடு
மண்ணுள்ளோர்
என்றைக்கும்
வாழவே
பரம
வாசல் திறந்தோர்
நீர்
வாழ்க, இயேசுவே.
*******
E_Book: S.K. Rajan,
Tuckerammalpuram, Cell: 9843755298

கோப்புகளாக பதிவிறக்கம் செய்ய
PDF - கோப்பாக பதிவிறக்கம் செய்ய
Word Document - கோப்பாக பதிவிறக்கம் செய்ய
Comments
Post a Comment